விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘800‘ படத்தின் கதைக் கரு வெளியானது : அரசியல் இல்லை என தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!!

By: Udayachandran
14 October 2020, 8:08 pm
Quick Share

முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் கதையே இதில் அரசியல் இல்லை என ‘800‘ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் திரைப்படம் 800. இந்த திரைப்படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு 800 என் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என இலங்கை தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருவது மட்டுமல்லாமல், #shameonvijaysethupathi என்ற ஹேஷ்டேக்குள் டிரெண்டாகி வருகிறது.

800 படத்திற்கு எழுந்து சர்ச்சை தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிக்கும் 800 திரைப்படம், முழுக்க முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை படம் என உறுதியளித்துள்ளனர்.

இந்த படத்தில் துளிகூட அரசியல் கிடையாது என தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம், தமிழகத்தில் இருந்து தேயிலை தோட்ட கூலியாளராக இலங்கைக்கு குடிபெயர்ந்த முரளிதரன், எப்படி பல தடைகளை தாண்டி உலகளவில் கிரிக்கெட்டில் சிறந்த பந்து வீச்சாளராக உயர்ந்தார் என்பதே கதை என விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த படம் இளைய சமுதாயத்திற்கு நம்பிக்கையை அளிக்கும் படமாகவும், தடைகளை எப்படி கடந்து சாதிக்க முடியும் என்பதை விவரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் இல்லை என கூறியுள்ளனர்.

அதே போல ‘800‘ திரைப்படத்தில் பல இலங்கையை சேர்ந்த பல தமிழ் திரைத்துறை கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்க உள்ளதால், அவர்களின் திறமை உலக அரங்கல் வெளிகாட்ட இந்த படம் நிச்சயம் ஒரு அடித்தளமாக இருக்கும் என்பதை நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

எல்லைகளை கடந்து மக்களையும் மனிதத்தையும் இணைப்பது தான் கலை. நாங்கள் அன்பையும், நம்பிக்கையும் மட்டுமே விதைக்க விரும்புகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Views: - 44

0

0