ஆதரவற்ற நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் தவித்த 85 வயது மூதாட்டி : மகன் போல வந்து உதவிய உதவி ஆய்வாளர்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 2:14 pm

ஆதரவற்ற நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் தவித்த 85 வயது மூதாட்டி : மகன் போல வந்து உதவிய உதவி ஆய்வாளர்!!

கோவை ரங்கே கவுண்டர் பகுதியில் வசித்து வரும் 85 வயது மதிக்கத்தக்க ஜன்னிலா என்கின்ற மூதாட்டி மகளிர் உரிமை தொகை வங்கிக்கு வரவில்லை என்கின்ற விபரத்தை அறிவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

விவரம் அறிந்து விட்டு நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டியை அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் அன்பழகன் அந்த மூதாட்டி விசாரித்து கை தாங்கலாக கூட்டி சென்று சொந்த செலவில் ரூபாய் 200 ஆட்டோக்கு கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

இந்த மூதாட்டியின் மகன் இறந்து விட்டார் என்பதும் இவரை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மூதாட்டி நிலையறிந்து தானாகவே முன்வந்து உதவிய உதவி ஆய்வாளரின் செயல் அனைவரின் மத்தியில் பாராட்டையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • 12th fail fame Vikrant Massey will leave Cinema பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Views: - 335

    0

    0