ஊழலில் 9 அமைச்சர்கள்.. ஒருத்தருக்கு ஒருமாசம் என்றாலும்… முதலமைச்சரை கடுமையாக சாடிய தமிழிசை!
Author: Udayachandran RadhaKrishnan12 May 2025, 7:01 pm
தமிழகத்தில் வருங்காலம் மாற்றம் ஏற்பட வேண்டும். 2026 தமிழக மக்கள் முழுமையாக பலன் பெற வேண்டும் இன்றைய ஆட்சியில் ஏறக்குறைய 500 வாக்குறுதிகள் கொடுத்தவர்கள் முக்கியமான வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை
உபரி மின்சாரம் இருக்கிறது என்று சொல்கிறார்கள் மின்தடை அதிகரித்துள்ளது இரண்டு நாட்களுக்கு முன்பு எனது வீட்டிலேயே மூன்று மணி நேரம் மின்சாரம் இல்லை.
இதையும் படியுங்க: செல்லூர் ராஜூ உருவபொம்மை எரிப்பு.. மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் என அறிவிப்பு : என்ன நடந்தது?
தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது ஆள் பற்றாக்குறை நிதி பற்றாக்குறை எனக் கூறி வருகிறார்கள். ஒரு வெளிச்சத்தை வசதியைக்,காற்றைக் குளிர்ச்சியை கூட முழுமையாக கொடுக்க முடியாத அரசாங்கமாக தான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
தீவிரவாதிகள் எதிராக நாடு எப்படி இருக்க வேண்டும் என்பது உலக நாடுகளுக்கு உதாரணமாக இந்தியா உள்ளது. ஜனநாயக முறைப்படி சாமானிய மக்கள் பாதிக்காமல் தீவிரவாதத்தை ஒழிக்கும் பணியில் முன்னோடியாக மோடி திகழ்கிறார் இப்படிப்பட்ட ஒரு பிரதமரை தமிழகத்தில் விமர்சனம் செய்பவர்கள் தமிழகத்தில் உள்ளனர்.
இப்படிப்பட்ட பாரதப் பிரதமர் மோடியை விமர்சனம் செய்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். ஆயிரம் ரூபாய் திட்டம் முறையாக பயணாளிகளுக்கு சென்று சேரவில்லை எந்த திட்டமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை
ஒவ்வொரு துறை அமைச்சரிடமும் துறைகள் பிடுங்கப்பட்டு வருகிறது ஒவ்வொரு அமைச்சரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.இன்றும் பத்து மாதங்கள் உள்ளது

ஒவ்வொரு அமைச்சரின் பிரச்சினையை தீர்ப்பதற்கு பத்து மாதங்கள் சரியாக விடும் அமைச்சர்கள் சுருட்டிய பணத்தில் பல பட்ஜெட் போடலாம், மோடி அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சர் மீது கூட ஊழல் குற்றச்சாட்டு இல்லை ஊழல் இல்லாமல் ராணுவ தடைவாளங்கள் வாங்கப்பட்டதால் இன்று நாம் எதிரியை பலமாக வீழ்த்தி வருகிறோம். என டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறினார்.
