கோவையில் 9 சுற்றுக்களாக வாக்கு எண்ணும் பணி : துணை ஆணையர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
21 February 2022, 2:04 pm

கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், வாக்கு என்ணும் அலுவலர்களுக்கு மாநகராட்சி கலையரங்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நாளை வாக்கு எண்ணும் பணிகள். 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணிகள் துவங்க உள்ளன.

கோவையில் பொருத்தவரையில் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணியில் 500க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

மொத்தம் 10 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அறைக்கு 14 இந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரே நேரத்தில் 140 இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. மொத்தம் 9 சுற்றுக்கள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இதனிடையே வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான பயிற்சி கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில், 340 அலுவலர்களுக்கு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா தலைமையில் பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் வாக்கு எண்ணிக்கையின் போது, இயந்திரத்தின் சீல் அகற்றுதல், இயந்திரத்தில் உள்ள செயல்பாடுகள், கடைபிடிக்க வேண்டிய முறைகள் உள்ளிட்டவை குறித்து புரெஜக்டர் வழியே பயிற்சி வழங்கப்பட்டது.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!