கோல்ப் விளையாட்டில் அசத்திய கோவை நீதிபதியின் 9 வயது மகள் : தென்னிந்திய போட்டிகளுக்கு தேர்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2021, 10:36 am
Golf 9 Yrs Old -Updatenews360
Quick Share

கோவை : தென்னிந்திய அளவில் கோல்ப் போட்டிக்கு கோவை நீதிபதியின் 9 வயது மகள் தேர்வாகியுள்ளார்.

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள ஸ்ரீபதி நகரைச் சேர்ந்தவர் கேசவன். இவர் விவசாயி. இவரது மனைவி உமாராணி நீதிபதி. இவர்களது மகள் அனுஸ்ரீ (வயது 9) தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த சிறுமி கடந்த 2 மாதங்களாக கோல்ப் விளையாட்டில் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் சிறுமியின் விளையாட்டு திறமையை பார்த்த பயிற்சியாளர் அவரை மைசூர் மற்றும் பெங்களூரில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து சென்றார்.

இதில் சிறுமி பெங்களூரில் தென்னிந்திய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்றார். இந்த போட்டியில் சிறுமி மூன்றாம் இடத்தை பெற்று உள்ளார். இதனிடையே டிசம்பர் மாதம் 28ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கு சிறுமி தேர்வாகியுள்ளார்.


இதுகுறித்து பயிற்சியாளர் கூறுகையில் சிறுமி 2 மாதத்திலேயே நன்கு விளையாடியதால் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றோம். இதில் சிறுமி சாதனை படைத்துள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெறும் போட்டியில் சிறுமி முதலிடத்தை பெறும் வகையில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்.

தினமும் காலை, மாலை ஒரு மணிநேரம் சிறுமி பயிற்சி பெறுகிறார். இந்த கோல்ப் விளையாட்டை அனைவரும் விளையாட முன்வர வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 213

0

0