சாக்கடையில் சிறுமியின் சடலம்… கஞ்சா போதையில் இளைஞர் வெறிச்செயல் ; நீதி கேட்டு கடலில் இறங்கி போராடிய மக்கள்!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 2:41 pm

புதுச்சேரியில் மாயமான சிறுமியின் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக்கோரி பொதுமக்கள் கடலில் இறங்கி போராடியதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி வீட்டின் அருகே சாக்கடையில் வீசி சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,19 வயது இளைஞனும், 60 வயதான ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 19 வயது இளைஞனும், சிறுமியை தேடுவதாக கடந்த 2 நாட்களாக நாடகமாடியதும் அம்பலமானது.

சிறுமி கை கால்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறியும், குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமுக்கள் முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகே நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், புதுச்சேரி சோலை நகர் சிறுமி கொலை விவகாரத்தில், நீதி வழங்கக்கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்திசிலை முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும், இறந்துபோன சிறுமிக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும், போதைப் பொருளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

பொதுமக்கள் திடீரென்று ஒன்று கூடி போராட்டத்தை ஈடுப்பதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசாரை தள்ளிவிட்டுவிட்டு கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!