கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; ஆந்திர சுற்றுலாத்துறை அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2025, 4:52 pm

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்த ₹ 300 டிக்கெட் மூலம் சாமி தரிசனம் செய்யும் விதமாக கோயம்புத்தூர், சேலம் இடையே இரண்டு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.

பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா வளர்ச்சியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதை அறிந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கடந்த ஆண்டு இறுதியில் அனைத்து மாநில சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு செய்த டிக்கெட்கள் ரத்து செய்தனர்.

இதையும் படியுங்க: நான் அம்மணமா வந்தேன்னு? என்னென்னமோ பேசுறீங்க?- கொதித்தெழுந்த வடிவேலு…

இதனால் கோயம்பத்தூர் , சேலம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்பட்ட இரண்டு சேவைகளில் அந்தந்த பகுதியில் உள்ள இரண்டு முகவர்கள் ஒத்துழைப்புடன் ஒரு சேவையாக மாற்றப்பட்டது.

மேலும் இந்த சுற்றுலா பேக்கேஜ் கீழ் ஆன்லைன் முன்பதிவு, மற்றும் கோவை, சேலம் முகவர்கள் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த பஸ்சில் ஏற்றி செல்லப்பட வேண்டும்.

இதில் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு திருப்பதியில் வழங்கப்படும் சர்ச தரிசன வரிசையில் விடப்பட்டு அதில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.

அவ்வாறு திருநாவுக்கரசு என்பவர் அவரது 9 வயது மகள் உள்பட குடும்பத்தினர் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு பேக்கேஜ் கீழ் முன்பதிவு செய்து பயணம் செய்தார்.

இதே பஸ்சில் பேக்கேஜ் கீழ் முன்பதிவு செய்யாத பயணியை கோவையில் இருந்து சேலத்திற்கு ₹ 200 பணம் பெற்று டிக்கெட் எதுவும் வழங்காமல் பயணியை பஸ்சில் இருந்த டிரைவர்கள் பி.வி.பிரசாத், எம்.வி. ரமணா ஆகியோர் ஏற்றி கொண்டனர்.

அவ்வாறு பஸ்சில் ஏறிய பயணி ஒருவர் திருநாவுக்கரசின் 9 வயது மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை கவனித்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்து டிரைவரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த நபரை டிரைவர் நெடுஞ்சாலையில் இறக்கி விட்டனர். இருப்பினும் பஸ்சில் டிரைவர்கள் பேக்கேஜ் கிழ் முன்பதிவு செய்தவற்களை தவீர மற்ற பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என்ற நிபந்தனை இருப்பினுன் அதற்கான ரூட் அனுமதி இல்லாமல் பயணியை ஏற்றியதால் தான் தனது மகளுக்கு இதுபோன்ற சம்பவம் நடந்ததாகவும், பஸ்சில் உள்ளே சிசிடிவி கேமராவும் செயல்படவில்லை என திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு தனக்கு நடந்த சம்பவத்தை புகார் அளித்தார்.

இந்த புகார் ஆந்திர முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் அலுவலகம் சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சுற்றுலாத்துறை விசாரனை செய்ததில் டிரைவர்கள் பி.வி. பிரசாத் , எம்.வி. ரமணா ஆகியோர் கோவையில் உள்ள தசரதன் டிராவல்ஸ் கோவை மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை தவீர்த்து கோயம்புத்தூரிலிருந்து சேலத்திற்கு அங்கீகரிக்கப்படாத பயணிகளை ஏற்றி, தலா ₹ .200 வசூலித்தது தெரிய வந்தது.

இந்த வழித்தடத்தில் பேக்கேஜ் தவீர்த்து வழித்தட டிக்கெட் பெற அனுமதி இல்லாத நிலையில் டிரைவர்கள் பணம் ஆசைக்காக அங்கீகரிக்கப்படாத பயணிகளை ஏற்றியதே 9 வயது சிறுமி மீது தவறான நடத்தைக்கு வழிவகுத்தது கண்டறிந்தனர்.

9-year-old girl sexually harassed on a bus from Coimbatore to Tirupati

இதனால் டிரைவர்கள் பி.வி. பிரசாத் மற்றும் எம்.வி. ரமணா ஆகியோருக்கு உடனடியாக பணி அமர்த்த வேண்டாம் என்றும் அவர்களிடம் விளக்கம் பெற்று இருவரையும் விஜயவாடாவில் உள்ள சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…
  • Leave a Reply