கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய 91 வயது முதியர்.. அதிர்ச்சி வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
26 May 2025, 4:38 pm

தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர் நகர் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சிந்துஜா. இவரது பக்கத்து வீட்டு அருகே 91 வயதான கந்தசாமி என்ற முதியவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கந்தசாமி வீட்டில் வளர்ந்த வாழை மரத்திலிருந்து வாழை இலை நிசாந்தின் காம்பவுண்டுக்குள் சென்றுள்ளது. மேலும் வாழை மரத்தில் பூச்சிகள் இருந்ததால் இதை அகற்ற நிஷாந்த் மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகியோர் கந்தசாமி இடம் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்க: கொச்சி கப்பல் மூழ்கியதால் கடலில் மிகப்பெரிய அபாயம்.. கேரள மக்களுக்கு அரசு எச்சரிக்கை!

அதற்கு அவர் அகற்ற மறுத்து உள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் தங்கள் வீட்டு பகுதிக்குள் இருந்த வாழைமரப் பகுதியை நிஷாந்த் மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகியோர் நேற்று முன்தினம் வெட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை சிந்துஜா வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருக்கும்போது பக்கத்து வீட்டுச் சேர்ந்த 91வயது முதியவரான கந்தசாமி கையில் அரிவாளுடன் வந்து சிந்துஜாவின் பின்புறம் கால் மற்றும் கையில் ஓட ஓட அறிவாளால் வெட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து உயிருக்கு பயந்து சிந்துஜா கூச்சல் இட, தொடர்ந்து விடாமல் முதியவர் அவரை அரிவாளால் விரட்டியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிந்துஜாவின் கூச்சலை கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து சிந்துஜாவை காப்பாற்றினர். இதைத்தொடர்ந்து அவரை காரில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் காவல் துறையினர் முதியவர் கந்தசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்போது இளம்பெண்ணை முன் விரோதத்தில் முதியவர் ஓட ஓட அறிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

  • Famous actress' daughter breaks down in tears on stage at Saregamapa audition சரிகமப ஆடிஷனில் பிரபல நடிகையின் மகள்… மேடையில் கண்ணீர் விட்டு கதறிய பிரபலம்!!
  • Leave a Reply