பள்ளிக்கு வர 98% மாணவர்கள் விருப்பம் : அமைச்சர் செங்கோட்டையன்…

13 January 2021, 12:11 pm
Minister Sengottayan- Updatenews360
Quick Share

ஈரோடு : 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஏளூரில் நடைபெற்ற அரசு விழாவில் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் கறவைமாடுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தமிழக முதலமைச்சர் நேற்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார். சுகாதார துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி செயல்படும். எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களை பாதுகாக்க அனைத்து அறிவுரைகளையும் முதலமைச்சர் கூறி உள்ளார்.

அதன்படி பள்ளிகள் செயல்படும். இன்றைய சுழ்நிலையில் பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்களாம். கட்டாய கட்டண குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக கற்கும் போது பெற்றோர்கள் கண்காணிக்கலாம் என்றார்.

முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்பு திறக்கப்பட்டுள்ளது. 6029 பள்ளிகள் தயாராக உள்ளது. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்பதை ஆய்வு செய்து திறக்கப்படும். ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம். மதிய உணவுடன் ஊட்டச்சத்து வழங்குவது குறித்து அரசுக்கு எந்த யோசனையும் இல்லை என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..

Views: - 3

0

0