கோவையில் 99 ஆடை விற்பனையகத்தின் புதிய கிளை : நல்லறம் அறக்கட்டளை நிறுவனர் எஸ்.பி அன்பரசன் துவக்கி வைத்தார்!!

16 September 2020, 11:19 am
99 Stores - updatenews360
Quick Share

கோவை : குனியமுத்தூரில் ஆர்கானிக் காட்டன் உட்பட பல்வேறு வகையிலான குழந்தைகள் உலகம் எனும் அனைத்து விதமான ஆடை விற்பனையகத்தை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் உலகம் எனும் காட்டன் ஆடை விற்பனையகம் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று NINETY NINE STORE என தனது கிளைகளை கோவை சாய்பாபா காலனி, தேனி, ஒசூர் என பல்வேறு இடங்களில் துவக்கியது.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் ஜே.பி.மசாலா வளாகம் அருகே தனது ஏழாவது கிளையான குழந்தைகள் உலகம் NINETY NINE STORE எனும் ஆடை விற்பனையக துவக்க விழா ரஜினி மன்ற நிர்வாகிகள் வடவள்ளி சண்முகம், ஜே.பி.சண்முக சுந்தரம் மற்றும் ஆர்.சி.தேவராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் திரு.அன்பரசன் கலந்து கொண்டு விற்பனையகத்தை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் ஸ்டோர் உரிமையாளர்கள் முகம்மது ரஃபி, அயூப்கான் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், குறைந்த விலையில் FACTORY OUT LET மற்றும் EXPORT SURPLUS காட்டன் ஆடைகளை எங்களது ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படுவதாகவும், குறிப்பாக பிறந்த குழந்தைகள் முதல், சிறுவர், சிறுமிகள் மற்றும் ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பினர்களுக்கும் ஏற்ற வகையிலான செத்தமான காட்டன் ஆடைகள் இங்கு விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

தற்போதையை குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் டி.சர்ட்ஸ்,சார்ட்ஸ்,மற்றும் கவுன் வகை என பல்வேறு வகையிலான நவீன ஆடைகள் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Views: - 2

0

0