வாந்தி வருவதாக கூறி வகுப்பறையில் இருந்து வெளியேறிய 9ம் வகுப்பு மாணவி : நடந்த விபரீதம்.. பள்ளி வளாகத்தில் குவிந்த போலீஸ்.. நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2022, 8:20 pm

நாமக்கல் : திருச்செங்கோடு அருகே அரசு பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு சக பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி சங்கர். இவர் மனைவி சந்தனமாரி. இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும், அர்ச்சனா என்ற 14 வயது மகளும் உள்ளனர்.

மகள் அர்ச்சான திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் இன்று மதியம் வகுப்பறையில் இருந்த ஆசிரியரிடம் வாந்தி வருவதாக கூறி வெளியே சென்றார்.

பள்ளியின் 2வது மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து குதித்துள்ளார். இதில் கால் எலும்பு முறிந்து வயிற்றில் பலமான காயங்களுடன் கிடந்த மாணவியை பார்த்த ஆசிரியர்கள் உடனடியாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

The-outrageous-decision-taken-by-a-student-who-walked-out-of-the-classroom-vomiting

உடனே மாணவிக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

பள்ளியில் ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தமா அல்லது வேறு ஏதேனும் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!