38 வயதுள்ள நபரின் ஓட்டை போட்ட 15 வயது சிறுவன்… விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 July 2024, 6:54 pm

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாலை 5 மணிக்கு 15 வயது சிறுவன் 38 வயதுடைய நபரின் ஓட்டை போடப்பட்டதால் பாமகவினர் அதனை தடுத்துள்ளனர்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அந்த இடத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி வழக்கறிஞர் பாலு வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அலுவலரிடம் இது குறித்து கேட்டபோது உரிய பதிலளிக்காததால் தேர்தலை நடத்த விடாமல் நிறுத்தினார்.

இதனை படம் எடுக்க வந்த செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அங்கிருந்து வெளியேற்றினர். இதனால் ஓட்டு போட வந்த பொதுமக்கள் அரை மணி நேரம் காத்திருந்தனர் .

பின்னர் திமுகவினர் அங்கு வந்து ஓட்டு சாவடிக்குள் உள்ளே நுழைந்தனர் இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. அந்தப் பகுதி சுற்றியுள்ள அதிரடி படையினர் மற்றும் காவல்துறையினர் கப்பியாம்புலியூர் ஒட்டுச்சாவடிக்கு வந்து கூட்டத்தை கலைத்தனர்.

பின்னர் ஓட்டு சாவடியில் இருந்து பாமகவினரை வெளியேற்றினர். அதன் பிறகு திமுகவினரையும் வெளியேற்றி ஆறு மணிக்கு மேல் உள்ளே இருந்தவர்களை மட்டும் அனுமதித்து ஓட்டு போட்டனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!