பார்வையற்ற 16 வயது சிறுமி.. இரக்கமே இல்லாமல் தந்தையும், அண்ணனும்.. 3 வருடமாக தாய் கொடூரம்!
Author: Udayachandran RadhaKrishnan3 July 2025, 11:42 am
பார்வையற்ற 16 வயது சிறுமியை பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் 3வருடமாக பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருக பரியாட்டு கிராமத்தில் வசித்து வரும் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் 16 வயதான மகளுக்கு பார்வை மாற்றுத்திறனாளியாக உள்ளார்.
இதையும் படியுங்க: தவெக துணை இருக்கும் : போலீஸ் அடித்து உயிரிழந்த அஜித் குடும்பத்திற்கு விஜய் நேரில் ஆறுதல்!
இதை பயன்படுத்தி பெற்ற தந்தையும், இரண்டு அண்ணன்களும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதை அறிந்த தாயும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார்.
3 வருடமாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் கருவுற்ற சிறுமிக்கு கொடூரத் தாய் கருக்கலைப்பு செய்துள்ளார்.
இது குறித்து சிறுமி, அக்கம்பக்கத்தினரிடம் கூறி அழுத போது தான் தெரிந்துள்ளது. அவர்கள் உடனே காவல்துறைக்கு தகவலை அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து சிறுமியை பரிசோதித்த போது, அவர் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பமே ஒன்று சேர்ந்து சிறுமியின் மனநிலையை பாதிக்க வைத்துள்ளதாகவும், இதனால் பாதுகாப்பான இடத்தில் சிறுமியை தங்கவைத்துள்ளனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட சகோதரர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தாய், தந்தையரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு அண்ணன் மட்டும் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதால், விபரத்தை அறிந்து தலைமறைவாகியுள்ளார். இதனால் அவரை தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.