நடுரோட்டில் அழுது கொண்டே தவித்த 3 வயது குழந்தை… அதிர்ந்து போன மக்கள் : அசந்து போன போலீஸ்!
Author: Udayachandran RadhaKrishnan26 August 2025, 2:28 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டாவில் 3 வயதான பெண் குழந்தை அழுதவாறு நின்று கொண்டிருந்தது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் குழந்தைக்கு சிற்றுண்டி வாங்கி கொடுத்து தனது பெற்றோர் மற்றும் இல்லத்தில் விலாசத்தை கேட்டு உள்ளனர்.
குழந்தை அழுந்தவாறு இருந்து நிலையில், பொதுமக்கள் சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் , அங்கு குழைந்தையின் விலாசத்தை கேட்டு தேடி வந்தனர்.

அப்போது அந்த குழந்தை அழுந்தவாறு தனது இல்லத்தை தானே காண்பிப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் செல்ல மறுத்து நடந்து சென்று தனது வீட்டை காண்பித்தது.
இந்த நிலையில் 3 வயது குழந்தை தனது வீட்டை நினைவில் வைத்து தனது வீட்டை காண்பித்த சம்பவம் போலீசார் இடையே குழந்தையின் திறமையை பாராட்டினர்..
மேலும் தனது பெற்றோர்களுக்கு பெண் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் இதுபோன்ற குழந்தைகளை தனியாக கடைகளுக்கு அனுப்புவது, காண்கானிப்பில் இன்றி இருப்பது உள்ளிட்டவைகளை போலீசார் அறிவுரை வழங்கினார்
