நிறுத்தப்பட்ட படகில் ஏறி விளையாடிய 4 வயது சிறுவன் கடலில் தவறி விழுந்து பலி : தூத்துக்குடி அருகே சோகம்!!

12 July 2021, 3:52 pm
Child Dead in Seea- Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திரேஸ்புரம் கடற்கரையில் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் கடலில் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவர் காலனி குடியிருக்கும் மீனவர் ரமேஷ் – மாரிச்செல்வி. இவர்களது 4 வயது மகன் மாதவன் கரையோரம் நிறுத்தப்பட்ட படகில் ஏறி விளையாடிக் கொண்டிருக்கும்போது கடலில் தவறி விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து வடபாகம் காவல்நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கடற்கரையில் சிறுவன் உடல் ஒதுக்கியதை அறிந்து அப்பகுதி மீனவர்கள் சிறுவனின் உடலை கைப்பற்றி பார்த்தபொழுது அது மாதவர் காலனி குடியிருக்கும் மீனவர் ரமேஷ் – மாரிச்செல்வி இவர்களது 4 வயது மகன் மாதவன் என தெரியவந்தது.

இதுகுறித்து அங்கு வந்த சிறுவனின் பெற்றோர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிறுவனின் உடலை கண்டு கதறி அழுத சம்பவம் அங்கு சுற்றி நின்றவர்களை கண்கலங்க வைத்தது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Views: - 60

0

0