10 பைசா இருந்தா ஒரு பிரியாணி பார்சல் : புதிய பிரியாணி உணவகத்தின் அறிவிப்பால் குவிந்த அசைவ பிரியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 October 2021, 8:16 pm
10 Paise Biriyani -Updatenews360
Quick Share

சிவகங்கை : 10 பைசாவுக்கு பிரியாணி என அறிவித்து விற்பனை செய்த பிரியாணி கடையில் அசைவ பிரியர்கள் குவிந்தனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா சிலை அருகே ராவுத்தர் கல்யாண வீட்டு பிரியாணி என்ற புதிய ஹோட்டல் இன்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா சலுகையாக முதல் 200 நபர்களுக்கு பழைய 10 பைசா நாணயம் கொண்டு வந்தால் 1 பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

இதனையடுத்து இன்று கடை முன் பிரியாணி பிரியர்கள் கடை முன் குவியத்தொடங்கினர். இதனையடுத்து முதலில் 10 பைசா நாணயம் கொண்டுவந்த 300 பேர்களுக்கு 1 பிரியாணி தாழ்ச்சா, தயிர் வெங்காயம், பாசிப்பருப்பு பாயாசம் அடங்கிய பார்சல் வழங்கப்பட்டது.

மேலும், 300 பேருக்கும அதிகமாக வந்த பிரியாணி பிரியர்கள் பிரியாணி பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த உணவகத்தை காரைக்குடி அழகப்பா பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா, காவல் துணை கண்காணிப்பாளர் வினோஜி, தொழிலதிபர் படிக்காசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Views: - 177

0

0