பாஜக தொண்டர்கள் மீது கைவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு… பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக 4 குழு அமைப்பு : அண்ணாமலை அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 2:46 pm

திருப்பூரில் நடைபெறும் நிகழ்வுக்காக சென்னையில் இருந்து விமான மூலம் கோவை வந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்…

அப்போது பேசிய அவர், பாஜகவினர் மீது கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறை, பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று வருகிறது. கோவை திருப்பூரில் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அவர்களது இல்லங்களுக்கு செல்கிறோம்..
4 குழு அமைத்துள்ளோம். கோவைக்கு வானதி சீனிவாசன் உள்ளார்.

அனைத்தும் சேதம் மதிப்பீடு செய்து அந்த தகவல்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புகிறோம். தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயும் என டிஜிபி தெரிவித்ததற்கு வரவேற்பு.

15 மாதமாக காவல் துறை கை கட்டப்பட்டுள்ளதை பேசி வருகிறோம். டி.ஜி.பி. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் அடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது..

முதல்வரின் நடவடிக்கைகள் திருப்தி இல்லை. இது தொடர்பாக அமித்சாவிடம் பேசினேன்.. பாஜக அமைதி காக்க வேண்டும். முதல்வர் மாற்றாந்தாய் மனப்பான்மையில் உள்ளார். தொண்டர்கள் அமைதி பேச்சு எல்லைக்கு தான். இதை மாநில அரசுக்கு தெரிவிக்கிறேன்..

காவல் துறை எத்தனை நாள் பாதுகாப்பு கொடுக்கும். 15 மாதமாக இண்டெலிஜென்ஸ் சரியில்லை. நாளைய போராட்டம் கோவையில் நடைபெறுகிறது. எதிர்த்து பேசினால் வழக்கு. பி.எப்.ஐ மேல் போகஸ் பண்ணியிருந்தால் இந்த சம்பவங்கள் நடைபெற்று இருக்காது..

கோவை காவல்துறையில் யாரெல்லாம் தொண்டர்கள் மீது கை வைத்தார்களோ அவர்கள் மீது பெட்டிசன் போடப்படும். நானே போஸ்டர் ஒட்டுகிறேன்.என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்..

காவல்துறை நடு நிலையாக இருக்க வேண்டும். அ.ராசாவிற்காக எஸ்.சி.எஸ்.டி சட்டம் போட்டது வருத்தம் அளிக்கிறது. நாளை பாஜக சார்பில் நடைபெறும் போராட்டம் தொடர்பான கேள்விக்கு போராட்ட அனுமதிக்கான கண்டிஷன் காவல்துறை தரட்டும்.. அதன்படி போராட்டம் நடைபெறும். கோவை பாஜக தலைமயை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?