பல்கலை., விடுதி கழிவறையில் மாணவிக்கு பிறந்த குழந்தை… ரகசிய காதலனுடன் நடந்த நாடகம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2025, 4:50 pm

சென்னை ஓமநதூரார் அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை கட்டைப்பையில் குழந்தையுடன் வந்த வாலிபர், மருத்துவமனை செக்யூரிட்டியிடம் இந்த குழந்தை சாலையோரம் கிடந்ததாக கூறியுள்ளார்.

உடனே அவர், திருவல்லிக்கேணி காவல்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர் காவல்துறை வாலிபரை அழைத்து கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை நடத்தினர். வாலிபருக்கு பாராட்டுகளை தெரிவித்து போட்டோக்களை எடுத்துக் கொண்டனர்

பின்னர் எந்த நேரம், எங்கிருந்து, எப்படி என அடுத்தடுத்து போலீசார் கேள்விகளை எழுப்பிய போது, முன்னுக்கு பின் முரணமாக வாலிபர் பதில் சொன்னதால் சந்தேகமடைந்த காவலர்கள் விசாரணையை துரிதப்படுத்திய போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அந்த குழந்தை என்னுடையதுதான், நான் ஊட்டியை சேர்ந்தன். நான் ஊட்டியில் உள்ள கல்லூரியில் படித்த போது, பிஎஸ்சி படித்த மாணவியுடன் காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி ஒன்றாக இருந்தோம்.

இளம்பெண் செல்வாக்கு உள்ள நபர் என்பதால், ஊட்டியிலேயே தங்கி படித்தார். நாங்கள் லிவ்விங் டூகெதர் வாழ்க்கையை வாழ்ந்தோம். அதில் அவர் கர்ப்பமடைந்தார். பல முறை கூறியும் அவர் கர்ப்பத்தை கலைக்கவில்லை.

அந்த படிப்பை முடித்து, அவர் சென்னை பல்கலையில் மேற்படிப்பு படிக்க வந்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். வீட்டிலும் தனக்கு வயிற்றி கட்டி உள்ளதாகவும், மருத்துவம் எடுத்து வருவதாக ஊட்டச்சத்து மாத்திரைகளை காண்பித்துள்ளார்.

மேலும் பல்கலை விடுதியில் அவருடன் தங்கியிருந்த மாணவிக்கு மட்டும் கர்ப்பம் என்பது தெரியும். இந்த நிலையல் விடுதியில் இருந்த போது பிரசவ வலி ஏற்பட்டு எனக்கு போன் செய்து வர சொன்னார்.

நானும் அந்த விடுதியில் அவரது தங்கையின் கணவர் என கூறி, விடுதி கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்தோம். குழந்தையை வளர்க்கலாமா வேண்டாமா என பலமுறை யோசித்து, குழந்தையை வீசிவிடுவோம் என முடிவெடுத்தோம்.

கட்டைப்பையில் குழந்தையை வைத்துக் கொண்டு ஓமந்தூரர் மருத்துவமனையில் கொடுத்துவிடலாம் என கருதி தான் நான் வந்தேன் என அவர் கூறினார். விசாரணைகளை பதிவு செய்த போலீசார், குழந்தையையும், மாணவியையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குழந்தை ஒன்றரை கிலோ எடையில் உள்ளதால் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தியதால், இருவரும் திருமணம் செய்து குழந்தையை வளர்ப்பதாக சம்மதம் கூறினர். பினனர் அவரவர் பெற்றோர்களுக்கு தகவலையும் அனுப்பினர்.

இதனிடையே குழந்தையை வீச முயன்றதாக வாலிபர் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்து அறிவுரைகூறி அனுப்பி வைத்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!