லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து.. பேருந்தில் இருந்து மாணவர்களை மீட்ட மக்கள்.. கோவையில் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2024, 11:11 am

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியின் பேருந்து ஒன்று சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்தது.

ரத்தினவேலு என்பவர் கல்லூரி பேருந்து ஓட்டிப் வந்துள்ளார். பாப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது கோழி தீவனம் ஏற்றி வந்த கனரக லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 மாணவிகள் உட்பட15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.

காயமடைந்த மாணவர்கள் அருகே இருக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து காரணமாக பல்லடம் – கொச்சி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?