கிணற்றில் தவறி விழுந்த பசு… தவித்த விவசாயி : துணிச்சலாக இறங்கிய இளைஞர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2024, 10:43 am

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பாதிரிவேடு காவல் நிலையம் முன்பு விவசாய பம்ப் செட் கிணற்றில் அருகில் மேய்ந்து கொண்டிருந்த பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான பசுமாடுகளில் ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது.

இதனை பார்த்த சுப்பிரமணி என்பவர் கிணற்றுக்குள் இறங்கி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பசு மாட்டை கயிறு கட்டி சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்டனர்.

மேலும் படிக்க: கோவையில் அண்ணாமலை தோற்றாலும் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் : வானதி சீனிவாசன் உறுதி!

பின்னர் சுப்பிரமணி மேலே வர முடியாமல் தவித்து போது அவரையும் கயிறு கட்டி பத்திரமாக கொண்டு வந்தனர். கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய பசுமாட்டை பத்திரமாக மீட்ட இளைஞர்களை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!