சாலையில் நடந்து சென்ற போது முட்டித் தூக்கி வீசிய மாடு : முதியவர் பரிதாப பலி!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2024, 1:37 pm

காரைக்குடியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (64). இவா் ஒத்தக்கடையில் வசித்துவரும் மகள் வீட்டுக்கு வந்தாா். அப்போது சாலையில் நடந்து சென்ற இவரை நேற்று (ஜூலை.10) மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதே போல, ஒத்தக்கடை அழகப்பன் நகரைச் சோ்ந்த பெட்டிக்கடை நடத்திவரும் செல்லத்தாயி (60) என்பவரும் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.

ஒத்தக்கடை ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலையில், மாநகராட்சி அருகிலிருந்தும் ஒத்தக்கடை பகுதிகளில் உள்ள வீடுகளின் மாடுகளும் ஒத்தக்கடையில் பகுதிகளில் அதிகமாக சுற்றித் திரிகின்றன.

துப்புரவு பணியாளர் ஒருவரையும் நேற்று மாடு முட்டி கால்வாய் பகுதியில் தள்ளியது. இவை நேற்று மாடு முட்டியதில் பலா் காயமடைகின்றனா். எனவே அவற்றின் உரிமையாளா்கள் மாடுகளை சாலைகள் திரியவிடாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!