பட வாய்ப்பில்லாமல் தவிக்கும் பிரபல நடிகை… அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் பட வாய்ப்பு உறுதி என கூறிய முக்கியப்புள்ளி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2022, 9:42 pm
RAmya - Updatenews360
Quick Share

80s,90s காலகட்டத்தில் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார் எட்டெழுத்து நடிகை. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். மேலும் இவர் ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் அதே சமயம் ஒரு சில திரைப்படங்களில் ஐட்டம் டான்சராகவும் தோன்றியுள்ளார்.

பின்னர் இவர் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்று 600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்த படத்தில் நடித்த இவருக்கு பட வாய்ப்பு இல்லாமல் போனது.

எட்டு எழுத்து நடிகை அஜஸ்மண்ட் செய்யாததால் பட வாய்ப்பு போனதா இல்லை சினிமாவில் அவர் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டாரா என்று தெரியவில்லை அதன் பிறகு நான்காண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலும் கூட அவர் நடிக்கவில்லை.

சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகைக்கு ஏதோ ஒரு படம் வெற்றி படமாக அமைந்தால் அடுத்தடுத்த பட வாய்ப்பு அவருக்கு குவிய ஆரம்பிக்கும் ஆனால் இந்த நடிகை மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்த அந்த படத்தில் நடித்தும் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நடிகை அந்த படத்தில் நடித்த பிறகு தற்போது பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று உள்ளார். பின்னர் தெலுங்கில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தின் போது அந்த நடிகை வேறொரு மாநிலத்தில் இருந்து மதுபானங்களை ஏற்றுக் கொண்டு வரும்போது காவல்துறை அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு அந்த வழக்கையும் சுமூகமாக முடித்து விட்டனர். நடிகை தற்போது பல நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும் தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 274

3

1