சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை… 20 வருட பகையை ஸ்கெட்ச் போட்டு தீர்த்த கும்பல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2023, 9:53 pm

சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் டொக்கன் ராஜா. இவர் பிரபல ரெளடியான சி.டி மணியின் கூட்டாளி. இவர்மீது கொலை மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மயிலாப்பூர் பல்லாக்கு நகர்ப் பகுதியில், 9-ம் தேதி இரவு ரௌடி டொக்கன் ராஜாவை மர்மக்கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தது. இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த மயிலாப்பூர் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாகவே, டொக்கன் ராஜாவை மர்மக்கும்பல் வெட்டிக் கொலைசெய்திருப்பது தெரியவந்தது. அதன்படி, தனிப்படை அமைத்த போலீஸார், கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில், ரௌடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் தொடர்புடையதாக, ஆவடி அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சபரிநாத், ராஜேஷ், திருநின்றவூரைச் சேர்ந்த மனோஜ்குமார், துரைபாக்கத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் ஆகிய நான்கு பேர் இன்று திண்டிவனம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய வந்தனர்.

ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் சரியாக இல்லாததால், சரணடைவதற்கான விண்ணப்பத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

இதையடுத்து, நான்கு போரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற திண்டிவனம் போலீஸார், அவர்களை சென்னை, மயிலாப்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

  • murali love actress sivaranjani but she did not accept him மது போதையில் அத்துமீறல்? திருமணம் ஆன பின்பும் நடிகையை காதலித்த முரளி! அடக்கொடுமையே?