ரத்தப் புற்றுநோயால் இறந்த நண்பன்.. இறந்த நாளில் சக நண்பர்கள் செய்த செயல் : கண் கலங்க வைத்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2022, 2:25 pm

விழுப்புரம் : ரத்த புற்று நோயால் இறந்த நண்பனின் நினைவு தினத்தை ஒட்டி ரத்ததானம் அளித்த நண்பர்கள் மற்றும் கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியய் ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே உள்ள ஒட்டன் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மின்சார துறையில் லைன் மேன் ஆக பணியாற்றி வரும் பழனி என்பவர் மகன் ராஜகுரு.

இவர் சென்ற ஆண்டு ரத்தப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் 50 கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்தனர்.

இதற்காக மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு ரத்த தானம் செய்ய வந்தவர்களிடமிருந்து ரத்தங்கள் பெறப்பட்டது.

பின்னர் பேசிய கிராம இளைஞர்கள் இது போலவே அனைவரும் நினைவு தினத்திற்கு ரத்த தானம் செய்வதால் அவரின் ஆன்மாவும் சாந்தி அடையும் எண்ணற்ற உயிர் காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்.

ஒருவர் இறந்த பின் அடுத்த நாளே மறக்கும் இந்த காலகட்டத்தில் நண்பரின் நினைவு தினத்தை மற்றவர்களுக்கு உபயோகமாக ரத்த தானம் செய்ய இளைஞர்கள் வந்தாலும் ஒட்டன் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இவர்களுடன் வந்து ரத்த தானம் அளித்தது நெகிழ்ச்சியய் ஏற்படுத்தியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?