4வது மனைவி இருந்தும் கள்ளக்காதல்.. கொலையில் முடிந்த உல்லாசம் : மாற்றுத்திறனாளிக்கு அதிரடி தண்டனை!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2025, 1:58 pm

திருநெல்வேலி மாவட்டம், அழகியபாண்டிபுரம் அடுத்த உக்கிரமன்னன் கோட்டையை சேர்ந்தவர் மிலன்சிங் (54). மாற்றுத்திறனாளி. இவருக்கு மூன்று பெண்களுடன் திருமணமாகி அவர்களை பிரிந்து ஜீவிதா என்பவரை, நான்காவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம், மலையன்குளம், பகுதியை சேர்ந்த 23, வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் அதே ஆண்டில் மாயமானார்.

இதுகுறித்து அவரது பெற்றோர், திருநெல்வேலி மாவட்டம், குருவிகுளம் போலீசில் தனது மகள் காணாமல் போனதாக புகாரளித்தனர்.

அதேநேரத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், எர்ரஹள்ளி அருகே தர்மபுரி–கிருஷ்ணகிரி சாலையின் ஓரம் கடந்த 2016ம் ஆண்டு பாதி எரிந்த நிலையில் இளம்பெண் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்டு காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் நடத்திய விசாரணையில், தர்மபுரியில் தங்கியுள்ள மிலன் சிங், பெண்ணை கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, மிலன் சிங்கையும், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது நான்காவது மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

A fun that ended in murder.. A sketch for a young woman with her 4th wife.. A mutant caught!

இதற்கிடையே, பெண் மாயமான வழக்கு மற்றும் கொலை வழக்கை இணைத்து, இவ்வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. விசாரணையில், மிலன்சிங், பெண்ணை ஆசை வார்த்தை கூறி, தர்மபுரி அடுத்த வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து, அடைத்து வைத்ததும். தொடர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு செய்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதை பொறுத்து கொள்ள முடியாத பெண் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மிலன் சிங், பெண்ணை அடித்தே கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்ட அவரது சடலத்தை, நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிந்தது.

இவ்வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தநிலையில் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி சுதா தன் தீர்ப்பில், ‘குற்றம்சாட்டப்ப்ட்ட மாற்றுத்திறனாளியான மிலன்சிங் மற்றும் அவரது 4வது மனைவி ஜீவிதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!