காங்., பிரமுகருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் மது அருந்திய கும்பல்.. தட்டிக் கேட்டவர் முகத்தில் பட்டாசு கொளுத்தி வீசிய கொடூரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 9:13 am

காங்., பிரமுகருக்கு சொந்தமான பாழடைந்த வீட்டில் மது அருந்திய கும்பல்.. தட்டிக் கேட்டவர் முகத்தில் பட்டாசு கொளுத்தி வீசிய கொடூரம்!!

கோவை பீளமேடு கோபால்சாமி நாயுடு பின்புறம் முன்னாள் காங்கிரஸ் எம்பி பிரபு அவர்களுடைய பழமையான வீடு உள்ளது.

தற்போது அங்கு யாரும் இல்லாததால் பாழடைந்துள்ளது. இந்த நிலையில் தீபாவளியான நேற்றுமுன் தினம் அந்த இடத்திற்கு இரவு ஆறு பேர் வந்து மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அருகில் குடியிருக்கும் பாலசுந்தரம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது அந்த நபர்கள் பட்டாசை கொளுத்தி அவர் வீட்டிற்குள் வீசியும் முகத்தில் வீசியும் சென்று உள்ளனர்.

இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தும் எந்தவித புகார் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல அந்த பகுதியில் ரோந்து பணிகள் முடுக்கி விடப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!