திமுக எம்எல்ஏ குறித்து மோசமான வார்த்தை…சமூக வலைதளங்களில் ஆபாசமாக, தரக்குறைவாக பதிவிட்ட கும்பல்.!
Author: Udayachandran RadhaKrishnan26 September 2025, 6:54 pm
திருவாரூர் தெற்கு வீதியில் கடந்த 21ஆம் தேதி திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இந்தப் பொதுக்கூட்டத்தை முகநூல் பக்கத்தில் கார்த்தி கேஎன்ஆர் என்ற பேஸ்புக் முகவரியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணனை குறித்து தரை குறைவாக ஒறுமையில் பதிவிட்டுள்ளார்.

இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பிரபாகரன், விஷ்வா, ராமச்சந்திரன், சிம்பு சரவணன், கார்த்திக், நெல்சன் யுவராஜா, விக்னேஷ், கவின், கார்த்திகேயன் உள்ளிட்டோர் அரைகுறை ஆடையில் கிழித்து திரிவது போல் சித்தரித்து பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்

பொய்யான தகவலை பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வண்ணம் இணையதளத்தில் பதிவிட்டு வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் சட்ட ஒழுங்கை சீர்குலைத்து இந்த ஆட்சிக்கு கலங்கம் விளைவித்து கலவரத்தை உருவாக்கும் விதத்திலும் பதிவிட்டு வருவதாக கூறி இந்த எட்டு முகநூல் கணக்குகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இந்த சமூக வலைத்தள முகநூல் பக்கத்தில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
