கொடைக்கானல் அருகே கரடு முரடான சாலையில் சென்ற ஜீப் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து : இளைஞர் பலி… மேலும் 3 பேர் கவலைக்கிடம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 November 2022, 1:13 pm

கொடைக்கானல் அருகே உள்ள தாண்டிகுடி கிராமத்திலிருந்து அரசன் கொடை செல்லக்கூடிய பகுதியில் 150 அடி ஆழத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து நள்ளிரவு நடைபெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே தாண்டிக்குடி மலை கிராமம் அமைந்துள்ளது . இந்தப் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம், செந்தில்குமார், அபிராமன், ஈஸ்வரன், சின்னையா, சரத்குமார், சேகர், நாகராஜன், கரியம்மாள் ஆகிய 9 பேர் தாண்டிக்குடி பகுதியில் இருந்து ஜீப் மூலமாக அரசன் கொடை பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு விவசாய பொருட்களை இறக்கி வைத்துவிட்டு திரும்பும் வேலையில் சுமார் 150 அடி பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அபிராமன் என்பவர் உயர்ந்தார் .

தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்கு செல்லக்கூடிய சாலை கரடு முரடான சாலையாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது .

தொடர்ந்து இந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாலையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் . மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

  • shankar have no other films than indian 3 movie ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே