தனியார் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை.. அலறிய மாணவர்கள் ; ஒருவர் காயம்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
14 June 2024, 6:35 pm
Leo
Quick Share

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்த நிலையில் வீட்டிலிருந்து சிறுத்தை அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியது.

அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையில் தாக்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் அருகே ஒய் எம் சி, சி எஸ் ஐ, தோனி சாவியோ உள்ளிட்ட பள்ளிகள் உள்ளதால் பள்ளியில் உள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

மேலும் சிறுத்தை பள்ளியில் அங்கேயும் இங்கேயும் தாவி சென்றும் பதுங்கியும் வருவதால் சிறுத்தையை பிடிக்க வனதுறையினர் சிரமம் அடைந்துள்ளனர். இருப்பினும் வனத்துறையின்ர் சிறுத்தை கண்காணித்து வருவதுடன் பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்

இந்த நிலையில் சிறுத்தையை மயக்க ஊசி செலுதி பிடிக்கும் பணிகள் தீவிரமாகியுள்ளது. சிறுத்தையை பிடிக்க தருமபுரியில் இருந்து சிறப்பு வனத்துறை வீரர்கள் திருப்பத்தூர் விரைந்தனர்.

Views: - 247

0

0