குடியிருப்புகளுக்கு அருகே ஹாயாக நடந்து சென்ற சிறுத்தை.. உயிர் பயத்தில் மக்கள்..!

Author: Vignesh
28 August 2024, 4:26 pm

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுத தியான பரம்பிக்குளம் குடியிருப்புகளுக்கு நடுவே இரவில் உலா வரும் சிறுத்தைகள் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பரம்பிக்குளம் பகுதியில், இரவு நேரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே சிறுத்தைகள் உலா வருகிறது.

சிறுத்தைகள் பரம்பிக்குளம் விருந்தினர் மாளிகை அருகே உலா வருவது குறித்து வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு அருகே சிறுத்தைகள் உலா வருவதால் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அடர்ந்த வனப்பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?