குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை: அச்சத்தில் உறைந்த நவமலைவாசிகள்..!!

Author: Rajesh
11 February 2022, 2:36 pm
Quick Share

பொள்ளாச்சி: நவமலையில் உள்ள மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலையில் மின்சார ஊழியர்கள் குடும்பத்தார் மற்றும் மலைவாழ் மக்கள் என 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டுயானைகள் வருகை அதிகரித்தே காணப்படுகிறது.

இதை தடுக்கும் விதமாக வனத்துறையினர்மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகன ரோந்து பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மாலை குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை உலா வந்தது. குடியிருப்புவாசிகள் வனத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் வனத்துறையினர் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொண்டனர்.

மேலும் யானை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். கடந்த சில தினங்களாக சின்னார் பதிமலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், கவி அருவி,வால்பாறை சாலை பகுதிகளில் நடமாட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 543

0

0