திம்பம் மலைப்பாதையில் திரும்பும் போது அரசு பேருந்து மீது மோதிய லாரி : அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2022, 4:24 pm
Bus Accident - Updatenews360
Quick Share

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 6வது கொண்டு ஊசி வளைவில் திரும்ப முற்பட்ட அரசு பேருந்தின் மீது எதிரே வந்த லாரி வலது புறம் மோதியதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை என்பதால் இந்த திம்பம் மலைப்பாதை வழியாக சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் மைசூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு பேருந்து திம்பம் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது.

அப்போது திம்பம் மலைப்பாதை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் பேருந்து திரும்ப முற்பட்டபோது சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி நோக்கி சென்று கொண்டிருந்த எதிரே வந்த லாரியின் வலதுபுறம் பேருந்து எதிர்பாராத விதமாக மோதி நின்றது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். எதிரே வந்த லாரியின் மீது பேருந்து லேசாக மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திம்பம் மலைப்பாதை ஆறாவது கொண்டை ஊசி வளைவில் அரசு பேருந்தின் மீது லாரி மோதியதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் இடையே சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Views: - 280

0

0