காவலருக்கு கத்திக்குத்து.. மதுரையில் நள்ளிரவில் அரங்கேறிய சம்பவம்!

Author: Hariharasudhan
12 November 2024, 2:16 pm

மதுரையில் பேருந்துக்காக காத்திருந்த காவலரைக் கத்தியால் குத்திய நபரைக் கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று (நவ.11) இரவு தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக மதுரைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, மதுரை மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் காரியாபட்டி செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்து உள்ளார். அந்த நேரத்தில், மதுரை சோளங்குரணியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரும் ராஜ்குமார் நிற்கும் பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க: விஜய்க்கு மதுரையில் நெருக்கடி.. கூண்டோடு தூக்கிய நகராட்சி!

இதனையடுத்து, மண்டேலா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வந்து உள்ளார், ஆறுமுகம். அப்போது, ஆறுமுகத்திற்கும், காவலர் ராஜ்குமாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, ஆறுமுகம் தான் வைத்திருந்த கத்தியால் காவலரைக் குத்தியுள்ளார்.

PERSON

இதனால் காயம் அடைந்த ராஜ்குமார், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு, வீடு திரும்பி உள்ளார். பின்னர், இது குறித்து அவனியாபுரம் காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!