மாடலிங் பெண்ணுக்கு ஆபாச அழைப்பு.. வசமாக சிக்கிய மேனேஜர்!

Author: Hariharasudhan
31 January 2025, 5:58 pm

புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண்ணின் போட்டோவை மார்பிங் செய்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வருகிறார். அது மட்டுமல்லாமல், பியூட்டிசியன் மாடலிங்கும் செய்து வருகிறார். இதனால், அவர், தனது இனஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இதனால், அவருக்கு ஆயிரக்கணக்கான Followers-களும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இப்பெண்ணின் புகைப்படத்தை எடுத்து ஆபாசமாகச் சித்தரித்து, அதை அவருக்கே அனுப்பி உள்ளார்.

மேலும், ஆபாச வார்த்தைகளால் வர்ணித்து, தன்னுடன் செல்போனில் பேச வர வேண்டும் அல்லது இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமாக வீடியோ காலில் வர வேண்டும் எனவும், இல்லையென்றால் மார்பிங் செய்த புகைப்படங்களை எல்லாம் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

Morphing Image threatening in Puducherry One arrested

எனவே, இது தொடர்பாக இணைய வழி காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், காவல் ஆய்வாளர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், அந்த நபர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க: போலீஸ் விசாரணையில் அதிரடி திருப்பம்.. பயந்து போய் காரை திருடி சென்ற இளைஞர்கள் எடுத்த முடிவு..!!

மேலும், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி செய்யும் ரூபசந்துரு (25) என்ற நபரின் செல்போனை ஆய்வு செய்தபோது, 30க்கும் மேற்பட்ட பெண்களை, அவர்களுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் இருந்து புகைப்படங்களைத் திருடி, மார்பிங் செய்து மிரட்டியது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…