ஆன்லைனில் Redmi போனை ஆர்டர் செய்த நபர்… வீட்டுக்கு வந்த கொரியரில் காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
29 May 2023, 1:23 pm

கோவை ; பிரபல ஆன்லைன் ஸாப்பிங் வலைதளத்தில் செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு வந்த பார்சலை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

கோவை – சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்து குமார் என்பவர் கடந்த 5ஆம் தேதி அமேசன் வணிக ஷாப்பிங் வலைதளத்தில் செல்போனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வீட்டிற்கு டெலிவரி வந்த செல்போனை அன்பாக்ஸ் செய்து பார்க்கும் போது அதில் போலியான செல்போன்கள் மற்றும் பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

தற்போது வரக்கூடிய ஆன்லைன் டெலிவரி எலக்ட்ரானிக் பொருட்கள் அனைத்தும் அன்பாக்ஸ் செய்யும் போது அதை வீடியோவாக எடுக்க வேண்டுமென ஒரு வேண்டுகோளை ஆன்லைன் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் அன்பாக்ஸ் செய்யும் வீடியோவை பதிவு செய்யப்பட்டபோது, அதில் போலியான பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தொடர்ந்து புகார் அளித்தோம். எந்தவிதமான நடவடிக்கும் எடுக்கவில்லை எனவும் நாங்கள் சரியான பொருட்களை தான் தங்களிடம் கொடுத்தோம் என சொல்வதாக தெரிவித்தார்.

மேலும், இது சம்பந்தமாக எனக்கான பணத்தையும் அல்ல எனக்கான பொருளையும் கொடுக்காவிட்டால் கன்ஸ்யூமர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார். தற்போது ஆன்லைனில் அதிகமான பொருட்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் போலியான லிங்கில் சென்று பொருட்களை புக் செய்வதால் இதுபோன்ற போலியான பொருட்கள் வருவதாக காவல்துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் முத்துக்குமார் ஏமார்ந்தது குறித்தான புகார் அளித்த பிறகு போலீசார் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதே சமயம் அவருக்கு வந்த டெலிவரி பொருட்களில் போலியான பொருட்களை இருப்பதற்கான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!