லைட்டை போட்டு சாவகாசமாக ஆட்டைய போட்ட கொள்ளையன் : கோவையில் செல்போன் கடையில் நடந்த கொள்ளையின் சிசிடிவி காட்சிகள்…!!

Author: Babu Lakshmanan
18 November 2022, 1:06 pm

கோவை பீளமேடு பகுதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு இன்று காலை கடையை திறக்க வந்து பார்த்தபோது, கடையில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை அடுத்து கடைக்குள் சென்று கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் இரு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில், ஒரு நபர் இருச்சக்கர வாகனத்திலேயே நின்று விட, மற்றொரு நபர் கடையின் முன்பக்க சிசிவிடி காமிராவை மேல்புறமாக திருப்பி உள்ளார்.

மேலும், கடையில் பூட்டை உடைத்த மர்ம நபர் கடைக்குள் நுழைந்து மின்விளக்கை ஆன் செய்து சாவகாசமாக செல்போனை திருடிச்சென்றுள்ளார். இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தினேஷ் பாபு பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?