யானையிடம் சிக்கிய மனநலம் பாதிக்கப்பட்டவர்! உயிர் தப்பிய காட்சி!! (வீடியோ)

22 October 2020, 2:13 pm
Elephant Escape - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் சாலையில் கரும்பு லாரிகளை தேடி சுற்றித்திரியும் யானைகள் கூட்டம் பொதுமக்கள் எச்சரிக்கையால் மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிர் தப்பிய காட்சி வைரலாகி வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை பண்ணாரி கோவில் அருகே வணிகவரித்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் உள்ளது. சரக்கு லாரிகளின் எடை மற்றும் உயரத்தை கண்காணிக்க பண்ணாரி மற்றும் ஆசனூரில் தடுப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிக உயரம் ஏற்றி வரும் கரும்புகளை அந்த இடத்திலேயே, கீழே தள்ளிவிட்டு சென்று விடுவதால், கரும்புகளை ருசி பார்த்து பழகி விட்ட காட்டு யானைகள், கரும்பு லாரிகளை தேடி அடிக்கடி சாலையில் சுற்றித்திரிவது வாடிக்கையாகி விட்டது.

இதற்கிடையே பண்ணாரியில் காவல்துறை சோதனை சாவடி மற்றும் தேனீர் கடைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டு யானைகள் சூறையாடியது.

இந்நிலையில் நேற்று மாலை பத்துக்கும் மேற்பட்ட யானைகள், குட்டிகளோடு தேசிய நெடுஞ்சாலையில், கரும்பு லாரிகளை தேடி சுமார் அரை மணி நேரம் சுற்றித்திரிந்தது. அவ்வழியாக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல், மெதுவாக ஊர்ந்து சென்றது.

அப்போது யானைகள் கூட்டத்தை கண்டு கொஞ்சம் கூட அசராமல், நாய்க்குட்டி ஒன்றை கையில் பிடித்துக்கொண்டு, மனநலம் பாதிக்கப்ப்டடவர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

யானைகள் மனம்நலம் குன்றியவரை நோக்கி வந்ததை பார்த்து, கூச்சலிட்டு, அவரை நகரும்படி கூறினர். யானைகள் கிட்ட நெருங்கம் போது வாகன ஓட்டி ஒருவர், பண்ணாரித் தாயே காப்பாற்று என கூக்குரலிட்டனர்.

இதையடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். யானைகள் கூட்டத்திடமிருந்து மனநலம் குன்றியவர் தப்பி சென்று சென்றவுடன் தான் அங்கிருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

https://youtu.be/N4jMQDjAK3Y

Views: - 16

0

0