3 பேரை சுற்றி வளைத்த கும்பல்… சரமாரி அரிவாள் வெட்டு : பதைபதைக்க வைத்த சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan2 September 2025, 10:08 am
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பூவாலம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ்(34) அதே பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவருடன் நிலம் தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்ததாக கூறப்படுகிறது .
இந்த நிலையில் நேற்று இரவு லோகேஷ் மற்றும் சென்னையை சேர்ந்த செல்வம், வினோத் ஆகியோர் வீட்டின் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது கஜேந்திரன் மற்றும் சிலர் அரிவாளுடன் வந்து வினோத், செல்வம், லோகேஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதனைக் கண்ட அக்கம்பாக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய மூன்று பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
