கோவையில் ஒரு மர்மமான மேம்பாலம்… தொடரும் விபத்துகளால் வாகன ஓட்டிகள் பீதி : ஐஐடி சிவில் துறை ஆய்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 12:48 pm
Trichy Road Flyover -Updatenews360
Quick Share

கோவை ராமநாதபுரம் சுங்கம் மேம்பாலம் பாலம் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் மூன்று பேர் விபத்துக்குள்ளாகி பலியான விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையிலான குழு சென்னை ஐ.ஐ டி சிவில் துறை உதவியை நாடியது.

இதனை அடுத்து முனைவர் கீதா கிருஷ்ணன் தலைமையிலான குழு இரண்டு முறை இராமநாதபுரம் சுங்கம் மேம்பாலத்தில் ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்குப் பின் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையிலான குழுவுக்கு ஐஐடி வல்லுநர்கள் குழு ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளது. இந்த பாலத்தை மீண்டும் இடித்து கட்ட வேண்டிய தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலத்தின் சுங்கம் மார்க்கமாக வளைவுக்கு முன் 150″மீட்டர் தூரத்தில் வேகம் காட்டும் கருவி பொறுத்த வல்லுநர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

அனைத்து வாகனங்களும் 40 கிலோமீட்டர் வேகத்துக்குள் செல்ல வேண்டும் கான்கிரீட் வேகத்தடை கனரக வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தினாலும் இருசக்கர வாகனங்களுக்கு ரப்பரில் செய்யப்பட்ட கிராஸ் பேரியர் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும் குறிப்பாக ரப்பர் தடுப்புகள் இருசக்கர வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி வேகவை தன்னுள் ஈர்க்கும் இதனால் வேகம் குறைந்து விபத்துக்கள் நடக்காது என்று விளக்கமும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 374

0

0