உரிமையாளரின் உயிரை காவு வாங்கிய புதிய கார்… வாங்கிய ஒரே நாளில் சோகம்.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2025, 2:19 pm

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த ராயபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் இவர் திருப்பூர் அண்ணா நகர் பகுதியில் வணிக நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் புதிய ஆட்டோ பார்க்கிங் வசதி உள்ள சொகுசு காரை வாங்கி உள்ளார்.

அதன் மூலம் தனது நிறுவனத்தில் பலமுறை காரை ஆட்டோ பார்க்கிங் வசதியில் தானாகவே இயங்கும் வகையில் நிறுத்தி உள்ளார். கடந்த வாரம் இவர் தனது நிறுவனத்தில் இடத்தில் காரை நிறுத்தி நண்பர்களுக்கு ஆட்டோ பார்க்கிங் சிஸ்டம் குறித்து விவரித்துள்ளார்.

மேலும் ஆட்டோ பார்க்கிங் முறையில் காரை இயக்க முயன்றுள்ளார். ஆனால் கார் பாதியில் நின்றதால் கதவை திறந்து பார்த்துள்ளார். அம்போது கார் தானாகவே பின்னோக்கி சென்றது இதனைத் தொடர்ந்து அவர் காரை நிறுத்த முயன்றுள்ளார் ஆனால் கார் கதவு அவர் மீது வேகமாக மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் காலில் கார் சக்கரங்கள் ஏறி இறங்கியது. இதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் காரை நிறுத்தி செந்தில்குமாரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!