தமிழகத்தில் உதயமானது புதிய கட்சி… 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி என அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2025, 1:36 pm
மதுரை திருப்பரங்குன்றம் தனியார் மண்டபத்தில் பி எல் ஏ ஜெகன்நாத் மிஸ்ரா புதிய கட்சி ஆரம்பித்தார்.
அதிமுக.பாஜக ஆதரவு கட்சிகளான கொங்கு இளைஞர் பேரவை தனியரசு , தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவர் கே சி திருமாறன் ஆகியோர் புதிய கட்சி துவக்க விழாவில் கலந்து கொண்டனர் .
விழாவில் பல்வேறு அமைப்புகளில் இருந்து நிர்வாகிகளும் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இன்னொரு செய்தியாளர்களை சந்தித்த ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், இன்று எங்களுடைய நமது மக்கள் முன்னேற்ற கழகத்தின் அரசியல் கட்சி துவக்க விழாவை வரலாற்று பெருமை வாய்ந்த மாநகர் மதுரையிலே எங்களுடைய அரசியல் கட்சியினை நாங்கள் தொடங்கி இருக்கின்றோம்.
இந்த மதுரை மண்ணானது பல்வேறு அரசியல் கட்சிகள் தொடங்கி வெற்றி கண்ட ஒரு புண்ணிய பூமி என்றும் இந்த பொண்ணையும் பூமியில் இருந்து உங்கள் கட்சியான நமது மக்கள் முன்னேற்றக் கழக கட்சியினை துவங்கி இருக்கின்றோம்.
பல்வேறு பிரதம கோரிக்கைகளை முன்னிறுத்தி பூரண மதுவிலக்கு, இளைஞர்களுக்கு பொருளாதார வேலைவாய்ப்பு கொள்கை, மகளிர் முன்னேற்றக் கொள்கையுடன், புதிய ஐந்து அணைகள் கட்டப்பட வேண்டும், தூய நீர் தூய காற்று தூய மண்வளம் நிறைந்த பாரத தேசத்தை உருவாக்கிட வேண்டும்.

எதிர்காலத்தில் வரக்கூடிய சந்ததிகளுக்கு தூய நீர் தூய காற்று தூய மண் வளத்தை வழங்க வேண்டும் என்கின்ற பிரதான கொள்கையை, விவசாயிகள் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யவேண்டும்,
விவசாயிகளுக்கு அண்டை மாநிலங்களில் போதிய நீரை பெற்றுத் தர வேண்டும். எங்களுடைய இயக்கத்தை வெற்றிகரமாக மதுரையில் நாங்கள் தொடங்கி இருக்கின்றோம்.
எங்களுடைய ஒத்த கருத்துடைய அரசின் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பயணிப்போம்.

விஜய் உடைய அரசியல் மிகவும் எழுச்சிஉள்ளது. மக்கள் மத்தியில் இன்று பிரமாதமான ஒரு எதிர்பார்ப்பை விஜயின் அரசியல் பயணம் கொடுத்துள்ளது.
நிச்சயமாக ஒரு மாற்றத்திற்கான அறிகுறியாக தான் விஜயின் பயணத்தை நாங்கள் எடுத்துக்கிறோம். எதிர்காலத்தில் இந்த பயணம் வெற்றிகரமாக அமைகிறதா என்று பார்க்க வேண்டும்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பு என்பது வரவேற்பிற்குரியது. இதுபோன்று இன்னும் பல பொருட்களுக்கு மத்திய அரசின் வரி குறைப்பு நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எங்களுடைய கொள்கையுடன் ஒத்து இருந்தால் விஜயுடன் கூட்டணி அமைப்போம்.
எங்களுடைய அரசியல் அதிகாரங்களை பெற வேண்டும். அரசியல் அதிகாரத்தை பெறாமல் எத்தனை மக்கள் உள்ளனர். அரசியல் அதிகாரம் பெறாத அத்தனை மக்களுக்கும் அரசியல் அதிகாரத்தை பெற்றுத் தரக்கூடிய இயக்கமாக எங்களுடைய நமது மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும்.
ஜனவரியில் நாங்கள் மாநாடு நடத்த உள்ளோம். இடையில் நாங்கள் கண்ணகி தேவிக்கு கோவிலை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்தி மூன்று நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் கண்ணகி பிறந்த பூம்புகார் மண்ணிலிருந்து கன்னியாகுமரி நோக்கி மிக பெரிய யாத்திரை நடந்த இருக்கின்றோம்.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் கண்ணகியை முன்னிறுத்தாதே இந்த ஒரு அரசியல் இயக்கமும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்கிறேன் என்று PLA ஜெகன்நாத் மிஸ்ரா கூறினார்
