பெட்ரோல் பங்கில் நூதன மோசடி.. 3000 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பி தப்பியோடிய வாகன ஓட்டி!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2025, 2:28 pm
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் என்பதால் பல்வேறு பகுதியில் இருந்து வருகின்ற வாகனங்கள் இரவு நேரத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் போட்டுக்கொண்டு சென்று வருகின்றன.
இதையும் படியுங்க: பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை… ஓட ஓட விரட்டி கொன்ற மகன்? ஷாக் தகவல்!
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெரியார் நகர் பகுதியில் இருந்து வந்த காரில் வந்த நபர் பெட்ரோல் பங்குக்கு நுழைந்து பணியாளர்கள் இல்லாததால் நேரடியாக பெட்ரோலை நிரப்ப முயன்ற போது, முடியாததால் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த பணியாளரை எழுப்பி 3000 ரூபாய்க்கு பெட்ரோலை போட கூறியுள்ளார்.
அதன்படி காரில் நிரப்பிய பெட்ரோலுக்கு உண்டான 3000 ரூபாய் பணத்துக்கு பதில் ஏடிஎம் கார்டை அளித்துள்ளார். அந்த ஏடிஎம் கார்டை பணியாளர் பயன்படுத்த முயன்ற போது அது காலாவதி ஆகிவிட்டது தெரிய வந்தது.
பயன்பாட்டில் இல்லாத செயல்படாத ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு பணத்தை அளிக்காமல் காரில் வந்த நபர் வேகமாக தப்பி சென்றுள்ளார்.

3000 ரூபாய்க்கு காரில் பெட்ரோல் நிரப்பிய பின் பணத்தை அளிக்காமல் அந்த நபர் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி அடிப்படையில் பங்க் உரிமையாளர் புருஷோத்தமன் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் காரில் வந்த நபரை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.