“எல்லா பொண்ணும், நம்ம பொண்ணு தான்” : உயிரிழந்த கள்ளக்குறிச்சி மாணவிக்காக மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய நபர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2022, 3:13 pm

கள்ளக்குறிச்சி மாவட்டம் கன்னியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்த நிலையில், 10 நாட்களுக்குப் பின் ஸ்ரீமதியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீமதியின் உயிரிழப்பு நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்வலையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்ரீமதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான பாலமுருகன் என்பவர் ஸ்ரீமதிக்காக தான் மொட்டை அடித்துள்ளதாக கூறி பேசும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த வீடியோவில், “ஸ்ரீமதி என்ற பொண்ணு எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி, எல்லா பொண்ணும் நம்ம பொண்ணுதான்…, எனக்கும் 3 பெண் பிள்ளைகள் இருக்கு.., நான் ஸ்ரீமதியின் மறைவுக்காக மொட்டை போட்டு இருக்கிறேன்” என்று பாலமுருகன் கூறுகிறார்.

விளாத்திகுளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஸ்ரீமதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மொட்டை அடித்துக் கொண்டு பேசிய வீடியோ இப்பகுதியில் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!