மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க.. சிவன் லிங்கத்தை அலங்கரித்த சூரிய ஒளி.. அபூர்வ நிகழ்வு..!

Author: Vignesh
21 August 2024, 11:45 am

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது.காரைக்குறிச்சி கிராமம் இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை சூரிய பகவான் ஈசனை சுற்றி வந்து வழிபட்டதாக ஐதீகம். இந்நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 ஆம் தேதியில் இருந்து 25 ஆம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெறும்.கொள்ளிடம் ஆறு

இதனால் சூரிய பகவான் சிவனை இந்த தலத்தில் வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி ஆகஸ்டு மாதம் இன்று காலை 6:10மணியில் இருந்து 6:20 மணி வரைக்கும் சூரிய உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்படும் பிரதிபலிக்கப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது.

இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது. இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்தனர்.சூரிய பகவான் சிவனை வழிபடுவதை பக்தர்கள் கண்டுகளித்து வழிபட்டு சென்றனர். இந்த அரிய நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழலாம் என பக்தர்கள் தெரிவித்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!