தனி நல வாரியம் அமைக்க வேண்டும்… முதலமைச்சருக்கு வீடியோ, போட்டோ கலைஞர்கள் நலச்சங்கம் கோரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan19 August 2025, 1:01 pm
1839 ஆம் பிரான்ஸ் அரசு டாகுரியோடைப் என்னும் புகைப்படம் முறையை உலகிற்கு இலவசமாக வழங்கியது. இதுவே புகைப்பட கலைக்கு புதிய பிறப்பாக அமைந்தது.
இந்தியாவில் இந்த தினத்தை ஓ.பி.சர்மா என்ற புகைப்பட ஆசிரியர் 1991 முதல் புகைப்பட தினத்தை அதிகாரப்பூர்வமாக கொண்டாட வழிவகை செய்தார். அதனை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 19ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் விநாயகம் தலைமையில் துணைத் தலைவர் அண்ணாமலை மாநில அமைப்பான டூக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் தலைவர் கோவிந்தராஜன், செயலாளர் ஜெய்குமார், பொருளாளர் லட்சுமிபதிராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தோஷ், சமாதான அந்தோணிராஜ், பாஸ்கர், ஜான்கண்ணா வைத்திலிங்கம், முத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட தலைவர் கோவிந்தராஜன், புகைப்பட கலைஞர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் தமிழக முதல்வர் வீடியோ போட்டோ கலைஞர்களுக்கு தனி நல வாரிய அமைத்து தர வேண்டும் என கோரிக்க வைத்தார்.
