கோழிக்கூட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு… பிடிபட்ட பிறகு விழுங்கிய முட்டைகளை வெளியே தள்ளிய வீடியோ..!!

Author: Babu Lakshmanan
7 September 2023, 5:04 pm
Quick Share

கடலூர் அருகே கோழிக் கூட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு, விழுங்கிய முட்டைகளை கீழே தள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் வசிப்பவர் நாகலட்சுமி. இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து கொண்டு வீட்டில் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு மழை பெய்து கொண்டு இருந்தது.

அப்போது, கோழி அலறும் சத்தம் கேட்டது. உடனே அங்கு சென்று பார்க்கும் பொழுது 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு இருப்பதை கண்டு, மகளுடன் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தனர். மேலும், பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த பாம்பு பிடி வீரர் கோழிக்கூட்டில் இருந்த பாம்பாய் லாபவகமாக பிடித்தனர். அப்போது, கோழி கூட்டில் இருந்த விழுங்கிய முட்டைகளை பாம்பு வெளியே தள்ளியது. பின்பு அந்த நல்ல பாம்பை காப்பு காட்டில் கொண்டு சென்று விடுவித்தனர்.

Views: - 117

0

0