வருத்தம் தான்.. ஆனாலும் சந்தோஷம்.. தோல்வியை கேக் வெட்டி கொண்டாடிய சமூக ஆர்வலர்..!

Author: Vignesh
5 June 2024, 6:38 pm

மதுரை நாடாளுமன்ற தொகுதி சுயேட்சையாக போட்டியிட்ட சமூக ஆர்வலர் – 1029 வாக்குகள் கொடுத்த வாக்காளருக்கு கேக் வெட்டி குடும்பத்தோடு நன்றி தெரிவித்து உள்ளார். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர பாண்டி இவர் மதுரை மாநகரில் பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த மூன்று தேர்தலில் போட்டியிட்ட நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இந்த நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர் சுயேட்சையாக பல இடங்களில் நேரில் சென்று பொது மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், நேற்று வாக்கு என்னும் பணி நிறைவடைந்த நிலையில் சுமார் 1029 வாக்குகள் பெற்று தோல்வியடைந்த நிலையில், தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 1029 வாக்குகள் வழங்கிய பொதுமக்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!