நடுக்கடலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து; உயிரிழந்த தூத்துக்குடி நபர் – என்ன நடந்தது?

Author: Vignesh
24 August 2024, 5:54 pm

தூத்துக்குடி வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சார்ஜா கடல் பகுதியில் கப்பலில் பணியில் இருக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தூத்துக்குடி புதுத்தெருவை சேர்ந்த கப்பல் மாலுமி சாரோன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி புது தெரு பகுதியைச் சேர்ந்த கப்பல் மாலுமி சாரோன்(20) இவர் எம் டி நரசிம்ங்கா என்ற கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட 19 ஆம் தேதி வளைகுடா நாடானஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் சார்ஜா கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் (M.T.NARASHIMHAA) டாங்க் தூய்மை செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருந்தபோது திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சாரோன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, நேற்று சார்ஜா துறைமுகம் வந்தடைந்த கப்பலில் இருந்து உயிரிழந்தோரின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த கப்பல் மாலுமி சாரோன் உடலை மீட்டுத் தர அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?