பிரபல நாளிதழ் அலுவலகத்தில் திடீர் தீ.. அதிகாலையில் மதுரையை ஸ்தம்பிக்க வைத்த சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2023, 9:47 am

பிரபல நாளிதழ் அலுவலகத்தில் திடீர் தீ.. அதிகாலையில் மதுரையை ஸ்தம்பிக்க வைத்த சம்பவம்!!!

மதுரை மாநகர் பைபாஸ் சாலை பகுதியில் உள்ள பிரபல (தினமலர்) நாளிதழ் அலுவலகத்தில் முதல் தளத்தில் உள்ள அறையில் இன்று இரவு 3 மணிக்கு மேல் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து பெரியார் பேருந்து நிலைய தீயணைப்புத்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தீயானது சில மணி நேரத்தில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த அலுவலக உபயோக பொருட்கள் தீயில் எறிந்து சேதம் அடைந்தது. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  • cooku with comali season 6 contestants list குக் வித் கோமாளியில் சிறகடிக்க ஆசை நடிகரா? இணையத்தில் லீக் ஆன போட்டியாளர்களின் பட்டியல்!