குவைத் தீ விபத்தில் இறந்த ராமநாதபுரம், கடலூரை சேர்ந்த தமிழர்கள்… மூச்சுத்திணறலால் பலியான சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2024, 11:40 am

குவைத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்துள்ள தகவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து கட்டிடத்தில் இவரும் தங்கி இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர் தீ விபத்தில் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் அங்கிருந்து தகவல்கள் வந்துள்ளன.

அவர் உயிரிழந்ததாக அவருடன் பணியாற்றக்கூடிய உறவினர்கள் தகவல் தெரிவித்ததன் பெயரில் உறுதி செய்ய பட்டுள்ளது. இந்த தகவல்களால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது மனைவி குருவம்மாள் மகன் சரவணக்குமார் ஆகியோர் கதறி அழுதது சோகம் அடைந்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக விசாரணை நடத்தி அவர் இறந்திருந்தால் அவரது உடலை தமிழகம் கொண்டு வரவும் உரிய இழப்பீடு பெற்று தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கருப்பணன் ராமு ஒருவிதமான 26 ஆண்டுகளாக குவைத் நாட்டில் பணிபுரிந்து வந்ததாகவும், விஷாவை முடித்துவிட்டு இன்னும் ஒரு வாரத்தில் சொந்த ஊரான ராமநாதபுரம் வர இருந்தது தற்போது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவர் உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதே போல கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் முட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!